குறுந்தொகை: பாடல் 172
குறுந்தொகை 172 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை,
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர்கொல்லோ?
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே.
வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கச்சிப்பேட்டு நன்னாகையார்
தாஅ - தாவு
நொ - நொய்வுடைமை
பறை - சிறகு
பழுமரம் - பழமரம்
பையுள் - துன்பம்
எமியம் - யாம்
ஏழூர்,ஓரூர் - இட ஆகுபெயர்
தலை - அசை நிலை
