குறுந்தொகை: பாடல் 173

குறுந்தொகை 173 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த

பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப்

பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,

அழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப,

''இன்னள் செய்தது இது'' என, முன் நின்று,

அவள் பழி நுவலும், இவ் ஊர்;

ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே.

குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது.

மதுரைக் காஞ்சிப் புலவன்

பொன் -ஆவிரை மலர்

நேர் - உவமை உருபு

புது மலர் - அன்றலர்ந்த மலர்

மிடைதல் - செறியப் புனைதல்

பனைபடு கலிமா - பனை மடலால் செய்த குதிரை

பூண் மணி - வினைத்தொகை

கறங்குதல் - ஒலித்தல்

அட்டு - அடுதல், கொல்லுதல்

அழிபடர் - மிகுந்த நினைவு

வழி வழி - மேலும் மேலும்

சிறத்தல் - தோன்றல்

இது - காம நோய் -

ஊர் - ஆகுபெயர்

ஆங்கு உணர்ந்தமை - செய்தலை உணர்ந்தமை

குறள். உடம்பொடு 1122

1247

உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு(குறள்.1122)

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேன்இவ் விரண்டு(குறள்.1247)

தமிழிலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் - ஒரு வரலாற்றுப் பார்வை

(திருத்திய பதிப்பு) சென்னை: மணிவாசகர் பதிப்பகம்,2023.