குறுந்தொகை: பாடல் 174
குறுந்தொகை 174 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து,
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே;
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
வெண்பூதி
பெயல் - முகில்
மழை துறத்தல் - பெய்யாது தவிர்த்தல்
புலம்பு - தனிமை
கடம் - பாலை நிலம்
விடுதல் - பக்கு விடுதல்,நொடித்தல்
நொடி - ஒலி
துதை - நெருக்கம்/அடர்ந்த
அத்தம் - அருவழி
அரிய - கடத்தற்கு அரியன
மன்ற - தேற்றப் பொருள்
அருள்என்னும் அன்பீன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு(குறள்.757)
