குறுந்தொகை: பாடல் 175
குறுந்தொகை 175 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி,
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை,
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு
இரங்கேன் தோழி! ''ஈங்கு என் கொல்?'' என்று,
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே?
பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது
உலோச்சன்
பருவத் தேன் - செவ்வித் தேன்
தேனசை(தேன்+நசை) - நசைஇ - விரும்பி
பறைத் தொழுதி - வண்டினம்
பறை - வண்டிற்கு ஏதுப்பெயர்
உரவுத்திரை - வலிய திரை ,பேரலை
தொகுதல் - கூடுதல்
கூறல் - வியங்கோள் வினைமுற்று.
