குறுந்தொகை: பாடல் 176
குறுந்தொகை 176 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்;
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே-
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே.
தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது.
வருமுலையாரித்தி
பயிற்றுதல் - பலநாளும் கூறுதல்
ஆசு - பற்றுக் கோடு
புலன் - புலம்
ஏறு - இடி
கலிழுதல் - கலங்குதல்
--------------------------
புறநானூறு 235,307
நன்றி - http://tamil concordance.in
