குறுந்தொகை: பாடல் 177
குறுந்தொகை 177 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே;
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர்
வருவர்கொல் வாழி தோழி! நாம் நகப்
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித்
தணப்பு அருங் காமம் தண்டியோரே?
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது.
உலோச்சன்
பாடுஅவிதல் - அலை ஒழிந்து முழக்கமின்றிக் கிடத்தல்
கானல் - கடற்கரைப் பரப்பு
புல்லென்று - பொலிவிழந்து
மன்றம் - ஊர்ப் பொதுஇடம், ஊர் அம்பலம்
அம் பெண்ணை - அழகிய பனை
கொல்,வாழி - அசைநிலை
தண்டியோர் - அமையப் பெற்றோர்
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்/
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு/
தடவின் ஓங்குசினைக் கட்சி(குறுந்.160:1-3)
நற்றிணை
---------------------
அன்றில்
124:1,152:7,218:11,303:5
அன்றிலும்
335:8
நன்றி - http://tamil concordance.in
