குறுந்தொகை: பாடல் 178

குறுந்தொகை 178 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

அயிரை பரந்த அம் தண் பழனத்து

ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்

ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள்

இடை முலைக் கிடந்தும் நடுங்கல் ஆனீர்

தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு

அரியம் ஆகிய காலைப்

பெரிய நோன்றனிர் நோகோ யானே.

கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது.

நெடும்பல்லியத்தை

அயிரை - ஒருவகை மீன்

பழனம் - பொய்கை

மலர - மலர்களை உடையன (மலர்தல்/விரிதல் அன்று)

தூம்பு - தொளை

கால் - தண்டு

குறுநர் - பறிப்போர்

ஆனீர் - அமைகின்றிலிர்

பெரிய நோன்றனிர் - பெரிய வருத்தம் பொறுத்தீர்

நோகு - நோகின்றேன் (தன்மை ஒருமை)