குறுந்தொகை: பாடல் 179
குறுந்தொகை 179 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல் ஐஇய! உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது.
குட்டுவன் கண்ணன்
கல் - ஒலிக்குறிப்பு
கடமா - ஒருவகை விலங்கு (காட்டெருமை)
ஆட்டுதல் - காட்டில் புகுந்து அலைத்துத் துன்புறுத்துதல்
எல் - பொழுது
எல்லின்று - இருண்டது
ஞமலி - நாய்
இளைத்தன - வேட்டையாடி இளைத்தன (சோர்வுற்றன)
உது - உதோ(இடைச்சுட்டு)
வரை - அடுக்கம், மலைப்பக்கம்
கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு(நற்றிணை 276:1 -2)
