குறுந்தொகை: பாடல் 180
குறுந்தொகை 180 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே அல்குல்
அவ் வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது.
கச்சிப்பேட்டு நன்னாகையார்
பரூஉ - பேய்
பா அடி - பரந்த அடி
இருங்களிறு - கரிய களிறுமாம்
நிரை - வரிசை
ஏந்தல் - தலைமை யானை
கரும்பின் கண் இடை - கரும்பின் இரண்டு கணுக்கள் இடை உள்ள அளவு
இடை - ஆகுபெயர்
கண் - ஏழன் உருபு
