குறுந்தொகை: பாடல் 181

குறுந்தொகை 181 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

இது மற்று எவனோ தோழி! துனியிடை

இன்னர் என்னும் இன்னாக் கிளவி-

இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான்

உழவன் யாத்த குழவியின் அகலாது,

பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்

திரு மனைப் பல் கடம் பூண்ட

பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?

தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

கிள்ளிமங்கலம்கிழார்

துனி - புலவி

இரு மருப்பு - கரிய கொம்பு

ஈன்றணி - ஈன்றணித்தாய காலம்(அண்மையில் கன்று ஈன்ற)

எருமைக் காரான் - பெண்மை சுட்டிய பெயர்

பால் - பக்கம்

பைம்பயிர் - பசும்பயிர் / தீஞ்சாலிப்

திருமனை - உழவன் இல்லம்

கடம் - கடமை