குறுந்தொகை: பாடல் 182
குறுந்தொகை 182 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
விழுத்தலைப் பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி,
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ-
கலிழ் கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே?
தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.
மடல் பாடிய மாதங்கீரன்
விழுந்தலை - கொழுத்த தலை
மா மடல் - பெரிய மடல்
மணி - மடல் மா கழுத்தில் கட்டும் மணி
பெருந்தார் - ஆவிரம்பூ எருக்கம் பூ மாலை
கலிழ் கவின் - அழகு மிக்க
கொல் ,ஓ - அசைகள்
___________________________________________________________________________
தமிழிலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் - ஒரு வரலாற்றுப் பார்வை
(திருத்திய பதிப்பு) சென்னை: மணிவாசகர் பதிப்பகம்,2023.
