குறுந்தொகை: பாடல் 183
குறுந்தொகை 183 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம் போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன் புல வைப்பிற் கானத்தானே.
பருவ வரவின்கண், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
ஒளவையார்
நாட்ட - நாட்டில் உள்ள
கொன்றை - கார் கால் மலர்
அம் பசு வீ - அழகிய பசிய மலர்
பசலை - பொன்னிறம்
நெறிகோடு அறல் பட்ட கொம்பு
பிணை - பெண் மான்
இரலை - ஆண் மான்
காயாங் குன்றத்துக் கொன்றை போல/
மாமலை விடர் அகம் விளங்க மின்னி (நற்றிணை 371:1-2)
