குறுந்தொகை: பாடல் 184

குறுந்தொகை 184 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;

குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே

இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு,

ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்

மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை

நுண் வலைப் பரதவர் மட மகள்

கண் வலைப் படூஉம் கானலானே.

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது.

ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்

அறிகரி - அறியப்பட்ட உண்மை

ஓம்புதல் - பரிகரித்தல்,(காத்தல்,போற்றுதல்)

சிறுகுடி- சிற்றூர்

அதற்பட்டு -அதன்கண் பட்டு

ஆண்டு -(அங்கு) கண் வலையில்

மயிற் கண் - மயற் பீலியில்

நுண் வலை - நுண்ணிய நூலால் ஆய வலை

கள்ளார்கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ/

எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்/

வாயின்பொய் கூறார் வடுவறு காட்சியார்/

சாயின் பரிவ திலர்.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்(குறள்.983)

நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்(புறநானூறு 3:14)

வாழ்தல் வேண்டிப்/ பொய் கூறேன் ;மெய் கூறுவல்;

(புறநானூறு139:5-6)