குறுந்தொகை: பாடல் 186
குறுந்தொகை 186 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால் தோழி! எம் கண்ணே.
பருவ வரவின், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
ஒக்கூர் மாசாத்தி
ஆர்கலி - ஆரவாரம்
ஏறு - இடி
கொல்லை - புன்செய்
