குறுந்தொகை: பாடல் 187
குறுந்தொகை 187 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
செவ் வரைச் சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன் தோழி!
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே.
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது.
கபிலர்
செவ்வரை - செங்குத்தான மலை
சேக்கை - தங்கும் இடம்
சுரை - சுரத்தல்
ஆர - நிரம்பும் படி
மாந்துதல் - பருகுதல்
உகளும் - துள்ளி விளையாடும்
