குறுந்தொகை: பாடல் 188
குறுந்தொகை 188 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.
பருவம் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது.
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
முகை - அரும்பு
முற்றுதல் - அன்று மாலை மலரும் செவ்வி அடைதல்
தகை - வனப்பு,அழகு
வாலிழை - அன்மொழித்தொகை(தலைவி)
மாண் - அழகு
