குறுந்தொகை: பாடல் 189

குறுந்தொகை 189 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

இன்றே சென்று வருதும்; நாளைக்

குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி

விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப,

கால் இயல் செலவின், மாலை எய்தி,

சில் நிரை வால் வளைக் குறுமகள்

பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.

வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது

மதுரை ஈழத்துப் பூதன் தேவன்

முடுகுதல் - விரைதல்

துமிப்ப - துண்டாக்குதல், குறைதல்,சிதைத்தல்,அழித்தல்

சில்நிரை - சில வரிசை

ஆகம் - மார்பு

உவக்கும் - உவப்பேம்