குறுந்தொகை: பாடல் 190
குறுந்தொகை 190 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி தோழி! பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே?
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பூதம்புல்லன்
நெறி(வினை) - நெறிப்பு
இருமை - கருமை
கதுப்பு - கருங்கூந்தல்
உரும் - இடி
உரறும் - முழங்கும்
நரை - வெண்மையான மின்னல்
நெடுவரை மருங்கின் பாம்புபட இடிக்கும்/
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்/
காலொடு வந்த கமஞ் சூல் மாமழை (குறுந்தொகை 158:1-3)
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து/
ஆன்நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே(குறுந்தொகை 86:4-6)
நனந்தலை உலகமும் துஞ்சும்:
ஓர் யான் மன்ற துஞ்சா தேனே(குறுந்தொகை 6:3-4)
