குறுந்தொகை: பாடல் 191

குறுந்தொகை 191 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?

நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்

தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்

தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய

ஏதிலாளர் இவண் வரின், ''போதின்

பொம்மல் ஓதியும் புனையல்;

எம்மும் தொடாஅல்'' என்குவெம் மன்னே.

பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

நோன்சினை - வலிய கொம்பு

ஏதிலார் - அயன்மை உடையவர்

பொம்மல் - பொங்குதல்

ஓதி - கூந்தல்

புனையல்,தொடால் - புனையாதே,தொடாதே (முன்னிலை ஒருமை)

எம்மும் - எம்மையும்

என்குவம் - என்போம்

இளமை சென்று தவத் தொல்லஃதே;

இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?(அகம்.6:21-22)

நெறியிரும் கதுப்பொடு பெருந்தோள் நீவி,

செறிவளை நெகிழ, செய்பொருட்கு (குறுந்.190:1-2)

பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி,

தொடிக் கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ

நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல்,

அம் தீம் கிளவிக் குறுமகள்

மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே!(அகம்.9:22-26)