குறுந்தொகை: பாடல் 192
குறுந்தொகை 192 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
''ஈங்கே வருவர், இனையல், அவர்'' என,
அழாஅற்கோ இனியே? நோய் நொந்து உறைவி!
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை
நறுந் தாது கொழுதும் பொழுதும்,
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே.
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.
கச்சிப்பேட்டு நன்னாகையார்
இனையல் - வருந்தாதே
அவர் - தலைவர்
அழாஅற்கு - அழேனோ,அழ மாட்டேனோ
கொழுதும் - கோதும்
பொழுதும் - இளவேனில் பருவம்
குரல் - கொத்து
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை/
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்/
மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்/
புதுமலர் கஞல, இன்று பெயரின்/
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!(புறம். 147:5-10)
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே. (குறுந்.270:8)
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே (குறுந்.225:7)
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல் (குறுந்.199:4)
