குறுந்தொகை: பாடல் 193
குறுந்தொகை 193 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன் எம் தோளே;
இன்றும், முல்லை முகை நாறும்மே.
தோழி கடிநகர் புக்கு, ''நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!'‘ என்றாட்குக் கிழத்தி உரைத்தது.
அரிசில் கிழார்
மட்டம் - தேறல்
மணிக்கலம் - நீலக் குப்பி
இட்டு வாய் - ஒடுங்கிய வாய்
பகுவாய் - பிளவுபட்ட வாய்,தவளையின் வாய்
தேரை - தவளை
தட்டைப்பறை - கிளி கடி கருவி
கறங்குதல் - ஒலித்தல்
தொல்லை - முந்திய,கடந்த, சென்ற
ஆய் கோடு இட்டு (குறுந்.358:2)
தொண்டகச் சிறு பறை/பானாள் யாமத்தும் கறங்கும்(குறுந்.375:4-5)
கள் அடு மகளிர் (பெரும்.339)
அரியல் பெண்டிர்(அகம்.157:1)
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன/நீலப் பைங்குடம் (பெரும்பாண்.381-382)
சங்க இலக்கியத்தில் மனித நேயம் சென்னை : என்.சி.பி.எச்., 2012- முனைவர் த.வசந்தாள்
