குறுந்தொகை: பாடல் 194

குறுந்தொகை 194 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

என் எனப்படுங்கொல் தோழி! மின்னு வர

வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்

கான மஞ்ஞை கடிய ஏங்கும்;

ஏதில கலந்த இரண்டற்கு என்

பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?

பருவ வரவின்கண், ''ஆற்றாளாம்'', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கோவர்த்தனார்

மின்னு - மின்னி

வான் - முகில்

ஏர்பு - எழுந்து

இரங்கும் - முழங்கும்

அதன் எதிர் - இடி முழக்கத்திற்கு எதிராக

ஏதில - அயன்மை உடையவை, தொடர்பு அற்றவை

ஏங்குதல் - அகவுதல்,ஆரவாரித்தல்

பெரு மலக்கு - பெருந் துன்பம்