குறுந்தொகை: பாடல் 195
குறுந்தொகை 195 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப்
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை,
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்?
"இன்னாது, இரங்கும்'' என்னார் அன்னோ
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச்
செய்வுறு பாவை அன்ன என்
மெய் பிறிதாகுதல் அறியாதோரே!
பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி மெலிந்து கூறியது.
தேரதரன்
சுடர் - ஞாயிறு
குன்றம் - மலை
படர் - துன்பம்
பையுள் - துன்பம்
தைவரல் - தடவுதல்
மெய் - உடல்
பாய்தல் - மோதுதல்
உறு - துன்பம்
செய்யுறு பாவை - அரக்கால் இயற்றிய/செய்த பாவை
பிறிதாகுதல் - அழிந்து உருகுதல்
காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி
மாலை மலரும்இந் நோய்(குறள்.1227)
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.(குறள்.1225)
