குறுந்தொகை: பாடல் 196
குறுந்தொகை 196 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,
''தேம் பூங் கட்டி'' என்றனிர்; இனியே,
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
''வெய்ய உவர்க்கும்'' என்றனிர்-
ஐய! அற்றால் அன்பின் பாலே.
வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.
மிளைக் கந்தன்
பைங்காய் - வேம்பின் காய்
தேம்பூங் கட்டி - கருப்புக் கட்டி
இனியே - இப்பொழுது
வெய்ய - வெப்பம் உடையன
தீம் பெரும் பைஞ் சுனை(அகம்.78:23)
பாரி பரம்பின் பனிச் சுனை போல்(புறம்.337:6)
பாரி பரம்பின் பனிச் சுனைத் தெண்ணீர் (புறம்.176:9)
காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி
மாலை மலரும்இந் நோய்.(குறள்.1227)
பாரி பாரி' என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே (புறநானூறு.107)
