குறுந்தொகை: பாடல் 197
குறுந்தொகை 197 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
யாது செய்வாம்கொல் தோழி! நோதக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே?
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கச்சிப்பேட்டு நன்னாகையார்
நோ - துன்பம்
நீர் எதிர் கருவிய கார் - கார் காலம்
கிளை மழை - மிக்குத் தோன்றும் மழை
ஊதை - வாடைக் காற்று
பேதுற்று - மயங்கி, வருந்தி
மயங்கிய - கலந்த
கூற்றம் - கூற்று அறுதி இடுதல்,முடிவு
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. (குறள் 1228)
