குறுந்தொகை: பாடல் 198
குறுந்தொகை 198 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்க தில்ல; வருகுவள் யாயே.
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது.
கபிலர்
யாஅம் - ஒரு வகை மரம்
சுட்ட - எரித்த
இயவு - வழி
முதல் - அடி
பால் - கதிரின் கண் உள்ள பால்
கரிக்குறடு - கொல்லன் உலைக்கண் கரி எடுக்கும் ஒரு கருவி
கோள் - குலை
படுகிளி - வினைத்தொகை
கடிகம் - ஓட்டுவேம்
சேறும் - செல்வேம்
ஆரம் - சந்தனம்
மலையன் - வள்ளல்
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்,
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து,
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர் (அகம்.368:1-4)
......................................................கானவர்
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை,
ஐவனம் வித்தி (புறம்.159:15-17)
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
