குறுந்தொகை: பாடல் 199
குறுந்தொகை 199 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பெறுவது இயையாது ஆயினும், உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய நெஞ்சே! திண் தேர்க்
கை வள் ஓரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள் வயின்,
இன்றை அன்ன நட்பின் இந் நோய்
இறு முறை என ஒன்று இன்றி,
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.
பரணர்
திண்தேர் - வலிமையான தேர்
கைவள் ஓரி - வள்ளல் ஓரி
எறிவளி - வீசும் காற்று (வினைத்தொகை)
மை ஈர் ஓதி - கருமையும் தண்மையும் மிக்க கூந்தல்
இறு முறை - முடிவு
மன்னுதல் - நிலை பெறுதல்,தங்குதல்,பொருந்துதல்
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்த்/
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்(அகம்.303:6-7)
