குறுந்தொகை: பாடல் 200
குறுந்தொகை 200 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து,
இழிதரும் புனலும்; வாரார் தோழி!
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே
கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.
பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி,
''பருவம் அன்று; வம்பு'' என்ற வழி, தலைமகள் சொல்லியது.
ஒளவையார்
கலுழ் - கலங்கல்
மீமிசை - ஒரு பொருட் பன்மொழி
தாஅய் - பரவி
மன்ற - தேற்றப்பொருள்
கால மாரி - பருவ மழை
உரும் - உருமினம்,இடியை உடையன
முரலும் - முழங்கும்
முன்வரல் - கார் வரும் முன் வருவேன்
ஏமம் - பாதுகாப்பு
ஏகாரம் - பிரிநிலை
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும். (குறள்.1207)
