குறுந்தொகை: பாடல் 201
குறுந்தொகை 201 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி,
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு,
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே!
கடிநகர் புக்கு, ''வேறுபடாது நன்கு ஆற்றினாய்!'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
அயலிலாட்டி - பக்கத்து வீட்டுக்காரி,பக்கத்து வீட்டுக்கு உரியவள் ( அயல்+இல்+ஆட்டி)
தேக்கொக்கு - கனிக்கு ஆகுபெயர்
நெல்லியம் புளி - நெல்லிக்கனி
புளி - ஆகுபெயர்
அம் - சாரியை
பணை - பருத்த
தூங்கும் - தொங்கும்
கழை - மூங்கில்
பால் கலப்பன்ன தேக்கொக்கு (குறுந்.201:2)
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை(குறுந்.201:3)
முள் இல் அம் பணை மூங்கில் (குறுந்.201:5)
கழை நிவந்து ஓங்கிய சோலை(குறுந்.201:6)
மலை கெழு நாடன் (குறுந்.201:7)
நன்றி: http://tamil concordance.in
