குறுந்தொகை: பாடல் 202
குறுந்தொகை 202 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு,
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே!
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது.
அள்ளூர் நன்முல்லையார்
இன்னா - தலைவன் புறத்தொழுக்கம்
புன்புலம் - புன்செய்
அமலுதல் - அடர்தல்
சிறு இலை - சிறிய இலை
