குறுந்தொகை: பாடல் 203
குறுந்தொகை 203 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்;
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்;
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்,
கடவுள் நண்ணிய பாலோர் போல,
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப்
பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே.
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
நெடும்பல்லியத்தன்
ஒரீஇ - ஒழுகுதல் , புறக்கணித்து நடத்தல்
என்னை(என்+ ஐ) - தலைவன்
பரியலென் - மனம் வருந்துதல், இரங்குதலை உடையேன்
மன் - கழிந்தது (இடைச்சொல்)
