குறுந்தொகை: பாடல் 204
குறுந்தொகை 204 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
''காமம் காமம்'' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்தாங்கு,
விருந்தே காமம்-பெருந்தோளோயே!
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது.
-மிளைப் பெருங் கந்தன்
அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம்
பிணி - நோய்
முதைச் சுவல் - பழைய மேட்டு நிலம்
நன்றி: http://tamil concordance.in
