குறுந்தொகை: பாடல் 205
குறுந்தொகை 205 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
உலோச்சன்
மின்னு - மின்னல்
கருவிய - தொகுதி
தூங்க - பொழிய
விசும்பு ஆடு அன்னம் - வினைத்தொகை
பொலம் படை - பொன்னால் ஆன தட்டு,தேர்த் தட்டு
வெண்தேர் - யானை மருப்பால் செய்த தேர்
இடு மணல் - அலை கொணர்ந்து இட்ட மணல்(வினைத்தொகை)
சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன்
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது(குறள். 1185)
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு(குறள்.1186)
