குறுந்தொகை: பாடல் 207
குறுந்தொகை 207 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
''செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்'' என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி,
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.
செலவுக் குறிப்பு அறிந்து. ''அவர் செல்வார்'' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.
உறையன்.
செப்பினம் - சொல்லி
செலினே - சென்றால்
அத்த ஓமை - பாலை நில வழியில் உள்ள ஓமை மரம்
அம் கவடு - அழகிய ஓமை மரக் கிளை
இனம் தீர் பருந்து - கூட்டத்திலிருந்து பிரிந்த பருந்து
தெள் விளி - தெளிந்த/ தெளிவான ஓசை
உயவுத்துணை - வழித்துணை
பொறிப்ப - பதிய
தாஅய் - விரைந்து
