குறுந்தொகை: பாடல் 208

குறுந்தொகை 208 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப்

பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை

குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்,

நின்று கொய மலரும் நாடனொடு

ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே.

வரை விடை, ''ஆற்றல் வேண்டும்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கபிலர்

ஒன்றுதல் - தலைவன் செயலுக்குப் பொருந்த ஒழுகுதல்

ஒன்றினான் - ஒன்று எண்ணுப்பெயர்