குறுந்தொகை: பாடல் 209
குறுந்தொகை 209 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய்
மறப் புலிக் குருளை கோள் இடம் சுரக்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே,
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
குருளை - குட்டி
கோள் இடம் - கொள்ளுதல்
சுரக்கும் - சுரத்தல்,ஊற்று
இறப்பு அருங் குன்றம் - கடத்தற்கு அரிய குன்றம்
இறந்த - கடந்த
புள் - பறவை
கடறு - காடு
முடச் சினை - வளைந்த சினை
நன்றி: http://tamil concordance.in
