குறுந்தொகை: பாடல் 210

குறுந்தொகை 210 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்

பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு

எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி

பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு

விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.

பிரிந்து வந்த தலைமகன், ''நன்கு ஆற்றுவித்தாய்!'' என்றாற்குத் தோழி உரைத்தது

காக்கை பாடினியார் நச்செள்ளையார்

கானம் - காடு

அண்டர் - ஆயர்

பல் ஆ - பசுக்கள்

தொண்டி - ஒரு சிறந்த மூதூர்

செல்லல் - துன்பம்

நன்றி: http://tamil concordance.in