குறுந்தொகை: பாடல் 211

குறுந்தொகை 211 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ

நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்

எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது

தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை

வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி,

ஆராது பெயரும் தும்பி

நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே.

''இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?''எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது.

காவன் முல்லைப் பூதனார்

அம் சில் ஓதி - தலைவி

எஞ்சினம் - தவிர்த்தோம்

எஞ்சா - எஞ்சிய ஒரு இணர்/ கொத்து

தேன் - தும்பி,ஒரு வகை வண்டு

ஆராது - வயிறு நிரம்பப் பெறாது