குறுந்தொகை: பாடல் 212
குறுந்தொகை 212 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப,
காண வந்து, நாணப் பெயரும்;
அளிதோ தானே, காமம்;
விளிவதுமன்ற; நோகோ யானே.
குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது.
நெய்தல் கார்க்கியன்
கொண்கன்- நெய்தல் நிலத் தலைவன்
கொடுஞ்சி - தாமரை மொட்டு வடிவில் தேர் முன் நடப்படும் ஓர் உறுப்பு
தென் கடல் - தெளிந்த கடல்
நோகோ - வருத்தம், துன்பம்
