குறுந்தொகை: பாடல் 213

குறுந்தொகை 213 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக்

கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப்

பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல்

ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின்

தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி,

நின்று வெயில் கழிக்கும் என்ப-நம்

இன் துயில் முனிநர் சென்ற ஆறே.

''நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது.

கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

நசை - விருப்பம்

ஞெரேர் - விரைவுக் குறிப்பு

கவைத்தலை - கவர்த்த கொம்புகளை உடைய தலை

முதுகலை - வயது முதிர்ந்த ஆண் மான்

ஒற்றி - உதைத்து

இறைஞ்சிய - வளைத்த

பரூஉ - பருத்த

ததரல் - சிதைந்த மரப் பட்டை

ஒழியின் - எஞ்சியது

மறி - குட்டி