குறுந்தொகை: பாடல் 214
குறுந்தொகை 214 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ்
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய, அயலது
அரலை மாலை சூட்டி,
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே.
தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது.
கூடலூர் கிழார்
மரம் கொல்லுதல் - மரங்களை வேரோடு அழித்தல்
துளர்ந்து - கொத்தி,உழுது
குரல் - கதிர்
இறடி - தினை
செயலை - அசோக மரம்
அயலது - கடப்ப மரம்
அரலை - மலர்
ஏம் - ஏமம்
ஏமுற்றார் - பித்துற்றார்
