குறுந்தொகை: பாடல் 215

குறுந்தொகை 215 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

படரும் பைபயப் பெயரும்; சுடரும்

என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர்

வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல்

வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை

குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்

கொடு வரி இரும் புலி காக்கும்

நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே.

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

படர் - துயர்

பைப்பய - பையப்பைய, மெல்ல மெல்ல

பெயர்தல் - நீங்குதல்

சுடரும் - ஒளிரும்

என்றூழ் - எல்(விளக்கம்)+ஊழ்(வீழ்தல்)

துழைஇய - துழாவி

குறும் பொறை - குண்டுக்கல், சிறுமலை

தழீஇ - தழுவி