குறுந்தொகை: பாடல் 216
குறுந்தொகை 216 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே;
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும்
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே;
''அன்னள் அளியள்'' என்னாது, மா மழை
இன்னும் பெய்யும்; முழங்கி
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே
பருவ வரவின்கண், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன்
விழுப்பொருள் - விழுமிய பொருள்
தருமார் - கொணர்தற் பொருட்டு
வள்ளி - கொடி
அம் காடு - அழகிய காடு
தோடு - தொகுதி,நிரல்
எல்வளை - ஒளி வளை
பாடு அமை சேக்கை - அமைந்த படுக்கை
படர் கூர்தல் - நினைவுத் துன்பம் மிகுதல்
சின் - முன்னிலை அசை
சாளரம் பொளித்த கால் போகு பெருவழி/வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி;(மணிமேகலை.4:53-54)
எண்ணெய்/நுரை முகந்தன்ன மென்பூஞ் சேக்கை (புறம். 50:6-7)
