குறுந்தொகை: பாடல் 217
குறுந்தொகை 217 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்;
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்;
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?'' என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற;
ஐதே காமம் யானே;
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே.
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது.
தங்கால் முடக்கொல்லனார்
ஒல்லும் - பொருந்தும்
ஊறு - இடையூறு
அஞ்சுவல் - அஞ்சுவேன்
யாங்கு - எவ்வாறு
செய்வாம் - செய்தல்
இடும்பை நோய் - இடையறாது துன்பம் செய்யும் காம நோய்
செத்து - கருதி
உயிர்த்தல் - பெரு மூச்செறிதல்
நன்றி: http://tamil concordance.in
