குறுந்தொகை: பாடல் 218

குறுந்தொகை 218 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்

கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்;

புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்;

உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!-

உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று

இமைப்பு வரை அமையா நம் வயின்

மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே.

பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கொற்றன்

விடர் - பிளப்பு, வெடிப்பு

முகை - மலை முழைஞ்சு

விறல் - வெற்றி

சூலி - சூலம் ஏந்திய கொற்றவை

கடன் - பலி, வழிபாடு

கைந் நூல் யாத்தல் - நோன்புக் கயிறு/காப்பு நூல் கட்டிக் கொள்ளுதல்

புள் - நல் நிமித்தம்

விரிச்சி - நற் சொல்

இமைப்புவரை - இமைக்கும் அளவுப் பொழுது

வல்லியோர் - வன்மை உடையோர்