குறுந்தொகை: பாடல் 219
குறுந்தொகை 219 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே;
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே;
''ஆங்கண் செல்கம் எழுக'' என, ஈங்கே,
வல்லா கூறியிருக்கும்; அள் இலைத்
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு
இடம்மன்-தோழி!-''எந் நீரிரோ?'' எனினே.
சிறைப்புறம்.
வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்.
பயப்பு - பசலை
நயப்பு - அன்பு,விருப்பம்
நார் - அன்பு
ஆரிடை - செல்லுதற்கு அரிய இடம்
செறிவு - பொறுமை, அடக்கம்
வல்லா - மாட்டாத, நடக்க இயலாத
தடவு நிலை - பெரிய, பருத்த
இடம்மன் - ஆக்கப்பொருள்
எந் நீரிர் - எத்தன்மையீர்
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்/
நீங்கும்என் மென்தோள் பசப்பு.(குறள்.1265)
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது/
பைந்தொடிப் பேதை நுதல்(குறள்.1238)
நள்ளென் யாமத்து உயவுத் துணை ஆக/
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு/
தானே சென்ற நலனும்/
நல்கார் கொல்லோ, நாம் நயந்திசினோரே?(அகம்.103:12-15)
நன்றி: http://tamil concordance.in
