குறுந்தொகை: பாடல் 220
குறுந்தொகை 220 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே.
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது.
ஒக்கூர் மாசாத்தி
பழ மழை - பண்டு பெய்த மழை
புதுப் புனம் - புதிதாகப் பண்படுத்தப்பட்ட புனம்
இரலை - மான்
குறைத் தலை - கதிர் அரிந்தமையால் குறைந்த நுனி/ தலைப் பகுதியை உடைய தட்டை
பாவை - மான் மேய்ந்து ஒழிந்த தாள்
இருவி - கதிர் கொய்து எஞ்சிய தட்டை
வெருகு - காட்டுப் பூனை
பொருட் பிரிந்தோர் - பொருள் தேடச் சென்ற தலைவன்
குறுந்தொகை 179:4-7
