குறுந்தொகை: பாடல் 221

குறுந்தொகை 221 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

அவரோ வாரார்-முல்லையும் பூத்தன;

பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,

பாலொடு வந்து கூழொடு பெயரும்

ஆடுடை இடைமகன் சென்னிச்

சூடிய எல்லாம் சிறு பசு முகையே.

பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது

உறையூர் முது கொற்றன்

பறி - பனை ஓலையால் செய்த தடுக்கு

மறியினம் - குட்டிகளை உடைய ஆட்டினம்

ஒழிய - தங்க

இடை மகன் - ஆட்டு இடையன்

நன்றி: http://tamil concordance.in