குறுந்தொகை: பாடல் 222
குறுந்தொகை 222 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது.
சிறைக்குடி ஆந்தையார்
புணை - தெப்பம்,மிதவை
மாரி - மாரிக் காலம்
பித்திகம் - பிச்சிப்பூ
வெரிந் - புறம்
துளி - மழைத் துளி
தலைஇய - பெய்த, பரவிய,பெற்ற
தளிர் - துளிர்,கொழுந்து
