குறுந்தொகை: பாடல் 223

குறுந்தொகை 223 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

''பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில்

செல்வாம் செல்வாம்'' என்றி; அன்று, இவண்

நல்லோர் நல்ல பலவால் தில்ல;

தழலும் தட்டையும் முறியும் தந்து, ''இவை

ஒத்தன நினக்கு'' எனப் பொய்த்தன கூறி,

அன்னை ஓம்பிய ஆய் நலம்

என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே.

வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது.

மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன்

ஆர்கலி - ஆரவாரம்

தில்ல - ஒழியிசைப் பொருள்

என்றி - என்று

தழல் தட்டை - கிளி கடி கருவிகள்

தழல் - கவண்,கல் எறி கருவி

தட்டை - மூங்கிலைப் பிளந்து ஒலி எழும்பும் படி செய்த கருவி / கிளி கடி கருவி

முறி - தழை

ஆய் நலம் - பெண்மை நலம்

என்னை (என் + ஐ) - தலைவன்

இன்னம் - இத்தகையேம்

ஆல் - அசை

இனி - இப்பொழுது

நன்றி: http://tamil concordance.in